பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாகத் திறன்களை வழங்குவது இன்றியமையாதது என்பதால் தற்போது குடிமைப்பணி அதிகாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், தரவுகள் பகுப்பாய்வு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
प्रविष्टि तिथि:
12 MAR 2023 6:08PM by PIB Chennai
இன்றைய நிர்வாகப் பின்னணியில் திறன் வழங்குவது இன்றியமையாதது என்பதால் தற்போது குடிமைப்பணி அதிகாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், தரவுகள் பகுப்பாய்வு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நிர்வாகப் பணியில் புதிதாக சேர்வோருக்கு புதுதில்லியில் இன்று நடைபெற்ற 124வது பயிற்சி நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
மாநில அரசின் குடிமைப் பணிகளில் இருந்து இந்திய நிர்வாகப் பணிக்கு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கான 124வது பயிற்சி, தேசிய பார்வைக்கான பிரதமரின் அழைப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124வது பயிற்சி 2008 முதல் 2020 வரையிலான தொகுப்பினரில் 131 பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்தது. மாநில குடிமைப் பணிகளில் இருந்து ஐஏஎஸ் ஆகப் பதவி உயர்வு பெற்ற பங்கேற்பாளர்கள் இந்திய நிர்வாக சேவையின் அகில இந்திய தன்மையைப் புரிந்துகொள்வதும் பொது நிர்வாகத்திலும் நாட்டின் பருப்பொருளாதாரத்திலும் பணியாற்ற தேசிய கண்ணோட்டத்தை உருவாக்குவதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.
அதிகாரிகள் பரந்த தேசிய கண்ணோட்டத்தைப் பெற ஆறு மாத கால பயிற்சி உதவுகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தேசப் பாதுகாப்பின் பரிமாணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக முப்படைகளுடன் இணைந்து வடகிழக்குப் பிராந்தியம் உட்பட 2 வார கால பாரத தர்ஷன் சுற்றுப்பயணமும் இந்தப் பயிற்சியில் இடம்பெற்றுள்ளது.
124வது பயிற்சியின் 131 பங்கேற்பாளர்கள் 18 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 20% பெண் பங்கேற்பாளர்கள். பங்கேற்பாளர்களின் சராசரி வயது 52 ஆண்டுகள். இக்குழுவினர் சராசரியாக 23 ஆண்டுகள் வெவ்வேறு நிர்வாகப் பிரிவுகளில் மாநில அரசுகளில் பணியாற்றியுள்ளனர்.
***
SRI/SMB/DL
(रिलीज़ आईडी: 1906187)
आगंतुक पटल : 228