வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தேசிய பெருந்திட்டம் (NMP) இரண்டாவது பிராந்திய கருத்தரங்கம் கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது
தேசிய பெருந்திட்டதைப் (NMP) பயன்படுத்துவது குறித்த சிறந்த செயல்முறை விளக்கம்
Posted On:
11 MAR 2023 4:05PM by PIB Chennai
பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம் (NMP) தளத்தை பரவலாக ஏற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் மாநில அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தொடர்ச்சியான பிராந்தியக் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்தரங்குகள் மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகள் இடையே பரஸ்பர கற்றலின் விளைவாக பங்கேற்பாளர்களிடையே அதிக வீரியம் மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மேற்கு மண்டலத்திற்கான முதல் பிராந்தியக் கருத்தரங்கம் 2023 பிப்ரவரி 20 அன்று கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. தென் பிராந்தியத்தின் 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், அதாவது கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, அந்தமான் & நிக்கோபார், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுடன் இரண்டாவது பிராந்தியக் கருத்தரங்கம் மார்ச் 10 & 11, 2023 அன்று கேரளாவின் கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கருத்தரங்கின் போது, திட்ட செயல்பாட்டுக்கான செலவைக் குறைப்பது மற்றும் செயல்திறனைக் கொண்டுவருவது தொடர்பான சிக்கல்களைக் கண்டறிய, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வணிக சங்கங்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறு டிபிஐஐடியின் சிறப்புச் செயலர் திருமதி சுமிதா தாவ்ரா கேட்டுக் கொண்டார். திட்ட செயல்பாடு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக துறைகளுக்கிடையேயான சேவைகள் மேம்பாட்டுக் குழுவை உருவாக்கலாம் என்றும், பன்முக மாதிரி உள்கட்டமைப்பு தொடர்பான தலையீடுகளை மேற்கொள்வதற்கான முன்னுரிமைப் பகுதிகளை முறையாகக் கண்டறிந்து திட்ட செயல்பாட்டுச் செலவைக் குறைப்பதற்கான செயல் திட்டங்களை உருவாக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். அடுத்த 5-10 ஆண்டுகளுக்குத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல் திறனுக்கான அணுகுமுறையைக் கொண்டிருப்பதற்காக சரக்கு போக்குவரத்தைக் கண்காணிப்பது, திட்ட செயல்பாடு தொடர்பான உள்கட்டமைப்பில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான தீர்வுகளுக்கு ஸ்டார்ட்-அப்களை ஈடுபடுத்துவது ஆகியவையும் அவரது குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய இந்தியாவுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான திட்டமிடல் மற்றும் திறமையான செயல்பாட்டுக்கான சூழல் அமைப்பை உருவாக்குதல் ஆகிய இரண்டும் உட்பட திட்டமிடலின் போது தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் பசுமை முயற்சிகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய பெருந்திடம் NMP என்பது நாடு முழுவதும் பன்முக மாதிரி மற்றும் இறுதிக் கட்டப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தை உருவாக்கும் அணுகுமுறையாகும். அரசாங்கத்தில் உள்ள துறைசார் குறைபாடுகளைக் களைந்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் பங்குதாரர்களுக்கான முழுமையான திட்டமிடலை நிறுவனமயமாக்கும் நோக்குடன் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பிரதமரால் தொடங்கப்பட்டது.
கொச்சியில் நடைபெற்ற பிராந்தியக் கருத்தரங்கின் முதல் நாளில், மத்திய அமைச்சகங்களால் தேசிய பெருந்திட்டத்தைப் (NMP) பயன்படுத்துவதில் சிறந்த அணுகுமுறைகளின் செயல்விளக்கம் இடம்பெற்றது. NMP/SMP இயங்குதளத்தைப் பயன்படுத்துவதற்கான அனுபவம், சிறந்த நடைமுறைகள் மற்றும் பார்வை ஆகியவை பங்கேற்ற 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மண்டல கருத்தரங்கின் இரண்டாவது நாளில், தேசிய திட்ட செயல்பாட்டுக் கொள்கை, மாநில செயல்பாட்டுக் கொள்கைகள், பல்வேறு மாநிலங்களில் திட்ட செயல்பாட்டினை எளிதாக்குதல் (லீட்ஸ்) மற்றும் நகரத் திட்ட செயல்பாட்டுத் திட்டம் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந் திட்டம் PMGS மூலம் துறைமுக இணைப்பு மற்றும் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்காக கொச்சி துறைமுக ஆணையத்தால் ஒரு விளக்கக்காட்சி இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து கொச்சின், காமராஜர், விசாகப்பட்டினம் மற்றும் நியூ மங்களூர் துறைமுகத்தின் 4 முக்கிய துறைமுகங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. துறைமுக இணைப்பு மற்றும் கரையோர திட்டங்களை ஆய்வு செய்வதற்காக கொச்சி துறைமுகத்திற்குப் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
திட்ட செயல்பாட்டுக் கொள்கை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக 18 மாநிலங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் முழுவதும் திட்ட செயல்பாட்டுக்காக வசதிகளை மேம்படுத்துதல் (LEADS )2023-24 அறிக்கையானது, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் திட்ட செயல்பாட்டுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை பகுப்பாய்வு செய்வதன் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. செயல்பாட்டை எளிதாக்குவதில் மாநிலங்கள்/யூனின் பிரதேசங்களின் தரம் வரிசைப்படுத்தப்பட்டது. கருத்தரங்கின் போது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் கொள்கையின் மேலோட்டப் பார்வையை முன்வைத்து பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன:
ஏற்றுமதி இறக்குமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான திட்ட செயல்பாட்டின் செலவைக் குறைப்பதில் தமிழ்நாடு கவனம் செலுத்தியது (5 முதல் 6% வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)
சரக்குகளில் மாநிலத்தின் செயல்திறனை மேம்படுத்துவதில் கர்நாடகம் தனது கவனத்தை முன்வைத்தது.
ஆந்திரப் பிரதேசம், திட்ட செயல்பாடு மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும் கிழக்குக் கடற்கரையிலிருந்து வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் தங்கள் நோக்கத்தை எடுத்துக்காட்டியது.
MMLP கள், உலர் துறைமுகங்கள், குளிர்பதனக் கிடங்குகள் போன்றவற்றின் மூலம் வலுவான தளவாடச் சூழலை உருவாக்கும் நோக்கத்தை தெலுங்கானா அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பன்முக மாதிரி இணைப்பைச் செயல்படுத்துவதன் மூலம் செயல்திறனை மேம்படுத்தி திட்ட செயல்பாட்டுச் செலவைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது.
கருத்தரங்கின் முடிவில் துறைமுக இணைப்பு மற்றும் பல்வகைமை பற்றிய குழு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் துறைமுகத்தை வழிநடத்திய தொழில்மயமாக்கல், ஆந்திரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான துறைமுகங்களை மேம்படுத்துதல் மற்றும் தெலுங்கானாவில் உள்நாட்டில் கவனம் செலுத்துவது இதற்காக இரு மாநிலங்களும் ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் இந்திய துறைமுகங்களின் முக்கிய மையமாக கடலோர கப்பல் போக்குவரத்துக்கு இணைந்து செயல்பட வேண்டும்.
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந் திட்டம் 'முழுமையான அரசாங்க' அணுகுமுறையின் தொடர்ச்சியாகவும், பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந் திட்டத்தை நிறைவுசெய்யவும், தேசிய செயல் கொள்கை (NLP) சேவைகள் மற்றும் மனித வளத்தில் செயல்திறனை மேம்படுத்துவதற்கான கூறுகளை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் . கல்வியில் முக்கிய செயல்பாடுகள் மற்றும் உயர் கல்வி பொருத்தமான தொழில்நுட்பங்களை உருவாக்கத் தொடங்கப்பட்டது.
திட்ட செயல்பாட்டுத் துறைக்கான விரிவான இடைநிலை, குறுக்கு-துறை மற்றும் பல அதிகார வரம்பு கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் திறமையான செயல்பாட்டுக்கு முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து துணைத் துறைகளுக்கும் விரிவான கொள்கையை வழங்குகிறது.
தேசிய திட்டத்தை செயல்படுத்தும் கொள்கையின் பார்வையானது, துரிதப்படுத்தப்பட்ட மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நாட்டில் தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, குறைந்த செலவில், மீள்திறன், நிலையான மற்றும் நம்பகமான திட்ட செயல்பாட்டை உருவாக்குவதாகும். அதன்படி, தேசிய பெருந்திட்டத்தின் (NLP) பார்வையை அடைவதற்கான பரந்த இலக்குகள்: (i) 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய அளவுகோல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் இந்தியாவில் தளவாடங்களின் விலையைக் குறைத்தல். (ii) திட்ட செயல்பாட்டுக்கான செயல்திறன் குறியீட்டு தரவரிசையை மேம்படுத்துதல் - 2030 ஆம் ஆண்டளவில் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இருக்க முயற்சி செய்ய வேண்டும், மேலும் (iii) திறமையான திட்ட செயல்பாட்டு சூழல் அமைப்பிற்கான தரவு சார்ந்த முடிவு ஆதரவு முறையை உருவாக்குதல் ஆகியனவாகும்.
***
SRI/CJL/DL
(Release ID: 1905941)
Visitor Counter : 165