உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
தமிழ்நாட்டின் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்ட 2 நாள் ‘சிறுதானிய சந்தை மற்றும் கண்காட்சி’
प्रविष्टि तिथि:
09 MAR 2023 1:38PM by PIB Chennai
தமிழ்நாட்டின் மதுரையில் மத்திய அரசின் உணவுபதனத் தொழில்கள் அமைச்சகம் 2023 மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் ‘சிறுதானிய சந்தை மற்றும் கண்காட்சி’க்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாடு அரசின் வேளாண் சந்தை மற்றும் வேளாண் வணிகத்துறையின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையும் இணைந்து நடத்தும் சிறுதானியங்கள் விழா தொடரின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கம்பு, கேழ்வரகு, தினை, மக்காச்சோளம், சோளம் போன்ற சிறு தானியங்களுக்கு தமிழ்நாடு பெயர் பெற்றதாகும். மதுரை மாவட்டமும் இத்தகைய சிறுதானியங்கள் விளையும் இடமாகும். 2019-20-ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தில் 3,548 டன் கம்பு, 22,405 டன் தினை, 69 டன் கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் உணவு பதன குறுந்தொழில் உருவாக்கத் திட்டத்தின் கீழ், முதலாவது பொதுவான புத்தொழில் முயற்சி மையத்தை தமிழ்நாடு அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி மூர்த்தி தொடங்கிவைத்தார். மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு தா மோ அன்பரசன், மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தப் பொதுவான புத்தொழில் முயற்சி மையம், பருப்பு வகைகள் பதனம் செய்தல், காய்கள் மற்றும் பழங்கள் பதனம் செய்தல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், சிறு தானியங்கள் குறித்த கையேடு ஒன்றினை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரமுகர்கள், சிறுதானியங்கள் அடிப்படையிலான உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டனர். இந்தக் கண்காட்சியில், 150-க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
***
AP/SMB/KPG
(रिलीज़ आईडी: 1905364)
आगंतुक पटल : 362