கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒரு வாரக் கொண்டாட்டம் தேசிய நவீன ஓவியக் காட்சிக் கூடத்தில் இன்று தொடங்கியது

Posted On: 07 MAR 2023 6:41PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தை தேசிய நவீன ஓவியக் காட்சிக் கூடம் மார்ச் 7 முதல் 12 வரை  ஒரு வார காலத்திற்குக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் மையப்பொருள் “அனைவருக்கும் டிஜிட்டல்: பாலின சமத்துவத்துக்கான புதிய கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும்” என்பதாகும்.

“புகைப்படக் கலையைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பிலான கண்காட்சியுடன் இன்று இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தக் கண்காட்சியில் 60க்கும் அதிகமான சமகால பெண் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

பெண் ஓவியர்களுக்கான ஓவியப் பயிலரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் திரையிடுதல், உரைகள், குழந்தைகளுக்கான சிறப்புப் புத்தக வெளியீடு போன்றவற்றுக்கும் அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ளது.

***

AP/SMB/AG/RJ


(Release ID: 1904927) Visitor Counter : 174