வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தின் புதிய கார்பரேட் அலுவலகத்தை மும்பை அந்தேரியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திறந்து வைத்தார்
Posted On:
05 MAR 2023 5:04PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மும்பை அந்தேரியில் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தின் இசிஜிசி பவனைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டில் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு 750 பில்லியன் டாலர் ஏற்றுமதியைத் தாண்டுவது மிகவும் பொருத்தமானது என்றார். பிப்ரவரி வரையிலான புள்ளிவிவரங்கள் இந்த ஆண்டு 750 பில்லியன் டாலர் ஏற்றுமதியைத் தாண்டும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் கூறினார்.
“முழுமையான ஊழலற்ற இந்தியாவை நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாம் சளைக்காமல் எதிர்த்து நிற்க வேண்டும். இந்தியாவை வல்லரசு ஆக்க வேண்டுமென்றால், புதிய இந்தியாவானது உயர்மட்ட நேர்மையுடன், அரசு, தொழில்துறை, இசிஜிசி, ஏற்றுமதி இறக்குமதி வங்கி மற்றும் பிற பங்குதாரர்களின் கூட்டு முயற்சியுடன் இருக்க வேண்டும் என்று நாம் முடிவெடுக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும், நமது வேலையில் வெளிப்படைத்தன்மை, செயல்பாடுகளில் எளிமை, உதவிகரமாக இருப்பது, முடிந்தவரை ஆன்லைன் செயல்பாடுகளாக மாற்றுவது என உலகமே பொறாமைப்படும் அளவில் வளர்ச்சியடைய உதவுமாறு தொழில்துறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அவர் கூறினார்.
***
AP/PKV/DL
(Release ID: 1904446)
Visitor Counter : 171