பாதுகாப்பு அமைச்சகம்

சர்வதேச கடல் பயிற்சி/ கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 23 (IMX/ CE-23)-ல் ஐஎன்எஸ் திரிகண்ட் பங்கேற்கிறது

Posted On: 05 MAR 2023 2:46PM by PIB Chennai

வளைகுடா கடற்பகுதியில் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 16-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச கடல்சார் பயிற்சி/ கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2023 (IMX/CE-23)-ல் ஐஎன்எஸ் திரிகண்ட் போர்க்கப்பல் பங்கேற்கிறது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்வழி வர்த்தகத்திற்காக பிராந்தியத்தில் கடற்பாதைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கத்துடன் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து ஐஎன்எஸ் திரிகண்ட் இந்த பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

 

IMX/CE-23 என்பது உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடல்சார் பயிற்சிகளில் ஒன்றாகும். இது இந்தியக் கடற்படை பங்கேற்கும் முதலாவது ஐஎம்எக்ஸ், 2-வது சிஎம்எஃப் பயிற்சி ஆகும்.

முன்னதாக, நவம்பர் 22-ம் தேதி, சிஎம்எஃப் தலைமையிலான ஆப்ரேஷன் கடற்வாள் 2 பயிற்சியில் ஐஎன்எஸ் திரிகண்ட் பங்கேற்றது.

 

கடற்வாள் 2 மற்றும் IMX/CE-23 போன்ற பயிற்சிகளில் இந்தியக் கடற்படை பங்கேற்பது, இந்தியப் பெருங்கடல் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளிடையே உறவை மேம்படுத்தவும், கடல்சார் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஆக்கப்பூர்வமாக பங்களிக்க கடற்படைக்கு உதவுகிறது.

 

***

AP/CR/DL



(Release ID: 1904393) Visitor Counter : 142