இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

போட்டிச் சட்டப் பொருளாதாரம் குறித்த 8-வது தேசிய மாநாடு நாளை புதுதில்லியில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAR 2023 3:36PM by PIB Chennai

இந்திய வணிகப் போட்டி ஆணையம் (சிசிஐ) போட்டிச் சட்டப் பொருளாதாரம் குறித்த 8-வது தேசிய மாநாட்டை புதுதில்லியில் நாளை நடத்த உள்ளது. இந்த மாநாடு 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய வணிகப் போட்டி ஆணையத்தால் நடத்தப்படுகிறது.

மாநாட்டு தொடக்க அமர்வில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் முழு அமர்வும் இரண்டு தொழில்நுட்ப அமர்வுகளும் நடைபெறும். இந்த ஆண்டின் மாநாட்டிற்கான தலைப்பு, ‘நம்பிக்கையின்மை மற்றும் ஒழுங்கு முறை: கலந்துரையாடல் மற்றும் ஒருங்கிணைப்பு என்பதாகும்‘.

சட்ட நிறுவனம் ஒன்றின் நிறுவன மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் அர்கியா சென்குப்தா முழு அமர்வை நெறி ஆளுகை செய்வார். தில்லி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் எம்.எஸ்.சாகு, தில்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் முன்னாள் மூத்தப் பேராசிரியர் டாக்டர் ஆதித்ய பட்டாச்சார்ஜி ஆகியோர் இரண்டு தொழில்நுட்ப அமர்வுகளுக்கு தலைமை வகிப்பார்கள்.

                                                                                                                       ***

AP/PKV/RR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1903700) வருகையாளர் எண்ணிக்கை : 256
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी