குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை, தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு உலகம் வியக்கிறது: டாக்டர் எம். எஸ். ராமையா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் குடியரசு துணைத்தலைவரின் பேச்சு
Posted On:
01 MAR 2023 3:35PM by PIB Chennai
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை, தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு உலகம் வியக்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று (01.03.2023) நடைபெற்ற டாக்டர் எம். எஸ். ராமையா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இத்தகைய பெருமிதத்தை, சாதனைகளை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்வதை நாம் அனுமதிக்கலாமா என்பது பற்றி சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
டாக்டர் எம். எஸ். ராமையா தமது வாழ்நாள் முழுவதும் கர்மயோகியாக வாழ்ந்தார் என்றும் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மாற்றம் கொண்டுவர கடமைப் பாதையில் நடைபோட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார் டாக்டர் ராமையா தொடங்கிய ஒரு கல்வி நிறுவனம் இன்று பல நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்திருப்பதை காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய குடியரசு துணைத்தலைவர் கடந்த காலப் புகழை மீட்பது நமது பாதையாக உள்ளது என்றார்
இளம் மனங்களின் ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கான மையமாக பெங்களூரு நகரம் உள்ளது என்றும் இவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு முழுமையான சுதந்திரம் வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார். இந்திய வரலாற்றில் அதன் குரலை உலகம் கேட்பது இப்போது இருப்பதைப்போல் முன்னெப்போதும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்
கடந்த 8-9 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரண்டு கல்லூரிகளும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு பல்கழைக்கழகமும் அமைக்கப்படுவதாகவும் உலக மக்கள் இதனை அறியும் போது வியப்படைகிறார்கள் என்றும் அவர் கூறினார் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பழைய மாணவர்கள் அமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் சமுதாயத்திற்கு உண்மையான உணர்வுடன் நன்றிக்கடன் செலுத்த இதுவே சிறந்த வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
***
AP/SMB/JS/KPG
(Release ID: 1903435)
Visitor Counter : 158