இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவரும், அறங்காவலருமான பில்கேட்ஸ், பேராசிரியர் அஜய் சூட் உடன் சந்திப்பு
Posted On:
01 MAR 2023 2:40PM by PIB Chennai
பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவரும், அறங்காவலருமான பில்கேட்ஸ், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் அஜய் சூட் – ஐ சந்தித்து முன்னுரிமைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டார். மேலும் ஒரே சுகாதார இயக்கம், கழிவில் இருந்து வருவாய் ஈட்டும் திட்டம் போன்றவைகளில் மேற்கொள்ளப்படும் முன்னுரிமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகள் மீது செலுத்தப்படும் முக்கியத்துவத்திற்கு திரு கேட்ஸ் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது தவிர விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து அறிந்துகொள்ள புதுமையான பரிசோதனை தொழில்நுட்பங்கள் நடவடிக்கைகளில் புத்தாக்கத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
***
AP/GS/AG/KP
(Release ID: 1903372)
Visitor Counter : 160