பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இங்கிலாந்தில் உள்ள வாடிங்டனில் கோப்ரா வாரியர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்கவுள்ளது

Posted On: 26 FEB 2023 5:12PM by PIB Chennai

பிரிட்டனில் உள்ள ராயல் விமானப்படையின் வாடிங்டன் விமானப்படை தளத்தில் கோப்ரா வாரியர் பயிற்சியில் பங்கேற்பதற்காக 145 விமானப்படை வீரர்கள் அடங்கிய இந்திய விமானப்படையினர் இன்று ஜாம்நகர் விமானப்படை நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.  2023  மார்ச் 06 முதல் 2023  மார்ச் 24  வரை இப்பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

கோப்ரா வாரியர் பயிற்சி என்பது பலதரப்பு விமானப் படைப் பயிற்சியாகும். இதில் ராயல் ஏர் ஃபோர்ஸ் மற்றும் இந்திய விமானப் படையுடன், ஃபின்லாந்து, ஸ்வீடன், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விமானப்படைகளும் பங்கேற்கும்.

இந்த ஆண்டு பயிற்சியில் ஐந்து மிராஜ் 2000 போர் விமானங்கள், இரண்டு சி-17 குளோப்மாஸ்டர்  III மற்றும் ஒரு ஐஎல் -78 நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களுடன் இந்திய விமானப் படை பங்கேற்கிறது.  பல்வேறு போர் விமான செயல்பாடுகளில் பங்கேற்பதும், பல்வேறு விமானப்படைகளின் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

***

SRI / SMB / DL(Release ID: 1902618) Visitor Counter : 109


Read this release in: English , Urdu , Hindi , Marathi