குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசு தலைவருடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு
Posted On:
25 FEB 2023 5:01PM by PIB Chennai
ஜெர்மனியின் பிரதமர் திரு ஓலாஃப் ஸ்கோல்ஸ் இன்று குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.
ஜெர்மன் பிரதமராக பதவியேற்றபின் இந்தியாவிற்கு தமது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்கோல்சை வரவேற்ற குடியரசு தலைவர் , இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் நீண்டகால உறவு உள்ளது, இது நமது பொதுவான விழுமியங்கள், பகிரப்பட்ட இலக்குகளால் வலுவடைந்துள்ளது என்று கூறினார். நமது இருதரப்பு உறவு பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்டு வரும் பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கும் பரந்த அளவிலான பகுதிகளை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
ஐரோப்பாவில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக ஜெர்மனி இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள முன்னணி முதலீட்டாளர்களில் ஜெர்மனியும் ஒன்று என்றும் குடியரசு தலைவர் குறிப்பிட்டார். ஜெர்மனி இந்தியாவின் இரண்டாவது பெரிய வளர்ச்சி ஒத்துழைப்பு கூட்டாண்மை நாடாகவும் உள்ளது என்றும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்றும் அவர் கூறினார். சமீபத்திய ஆண்டுகளில், உயர் கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் துறை சார்ந்தவர்களுக்கு ஜெர்மனி விரும்பத்தக்க இடமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவும் ஜெர்மனியும் வலுவான கலாச்சார தொடர்பைக் கொண்டிருப்பதாகவும், ஜெர்மன் இந்தியவியலாளர்கள் இந்தியாவில் பணிபுரியும் நீண்ட பாரம்பரியத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜனநாயக விழுமியங்கள், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, பலதரப்பு நிறுவனங்களின் சீர்திருத்தத்தை நிலைநிறுத்துவதில் இந்தியாவும் ஜெர்மனியும் பகிரப்பட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளன என்று குடியரசு தலைவர் கூறினார். இரண்டு துடிப்பான, பன்மைத்துவ ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் ஜெர்மனியும் புதிய மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
SRI / PKV / DL
(Release ID: 1902368)
Visitor Counter : 227