மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த சிஎஸ்சி அகாடமி-தேசிய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 23 FEB 2023 2:45PM by PIB Chennai

இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த மின்னணு நிர்வாகச் சேவை இந்தியா நிறுவன பொதுச்சேவை மையத்தின் துணை நிறுவனமான சிஎஸ்சி அகாடமி-தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்த, முன்னெடுப்புகளை கூட்டாக அமல்படுத்த இரு அமைப்புகளுக்கிடையே நீண்டகால கூட்டாண்மையை ஏற்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் திறன்மேம்பாடு, அங்கிகாரமையம், மெய்நிகர் அகாடமி, பயிற்சியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம், டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கம் தொழில்முனைவோர் மேம்பாடு, உள்ளடக்கம் மற்றும் சான்றிதழ்கள், பரஸ்பர கூட்டாளிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான வழிமுறைகள் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கவும், வடிவமைக்கவும்  வகைசெய்யப்பட்டுள்ளது.

(Release ID: 1901693)                  

                                                           ***    

AP/IR/JJ/KRS


(Release ID: 1901744) Visitor Counter : 222


Read this release in: English , Urdu , Hindi , Telugu