ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறையில் தொழில்நுட்பம் தொடர்பான 10-வது சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு - ‘டெக்னோடெக்ஸ் 2023’ மும்பையில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
22 FEB 2023 3:49PM by PIB Chennai
‘டெக்னோடெக்ஸ் 2023’: இந்திய ஜவுளித்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தொலைநோக்குப் பார்வை @2047, 10-வது சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டை மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்ஜோஷ், மும்பையின் கோரேகானில் உள்ள கண்காட்சி மையத்தில் இன்று (22.02.2023) தொடங்கிவைத்தார்.

டெக்னோடெக்ஸ் நிகழ்ச்சியை மத்திய ஜவுளித்துறையும், இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருப்பதன் விளைவாக வாங்குவோர் - விற்போர் இடையே சந்திப்புகள் ஏற்படுத்த பயனுள்ளதாக அமையும். பிப்ரவரி 22 - 24 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, உலக அளவிலான தொழில்நுட்ப ஜவுளித்துறை மதிப்புச் சங்கிலி மூலம் துறை சார்ந்த பங்குதாரர்களிடையே கலந்துரையாடல் நடத்துவதற்கான பொதுவான ஒரு தளமாக அமைகிறது.
தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த பங்குதாரர்கள் மத்தியில் பேசிய மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்ஜோஷ், ஜவுளித்துறையின் எதிர்காலம், அந்தத் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே அமையும். உலக அளவில் ஜவுளித்துறையில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் பலன்களை இந்தியா அனுபவிக்கும் நேரம் ஆகும் என்றார். அடுத்த சில ஆண்டுகளில், உள்நாட்டுப் பயன்பாடு மற்றும் ஏற்றுமதி இரண்டும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைய உள்ளது. இதன் விளைவாக இந்தத் துறைக்கு முக்கியத் தருணம் வாய்த்துள்ளது என்றார்.




----
AP/GS/KPG/KRS
(रिलीज़ आईडी: 1901447)
आगंतुक पटल : 223