சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆக்லாந்தின் வைபப்பா தௌமதா ராவ் பல்கலைக்கழகமும் மும்பை டாடா நினைவு மருத்துவமனையும் புற்றுநோய் சிகிச்சை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
Posted On:
22 FEB 2023 2:19PM by PIB Chennai
ஆக்லாந்தின் வைபப்பா தௌமதா ராவ் பல்கலைக்கழகமும் இந்தியாவின் மிகப் பெரிய, புகழ்பெற்ற புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான மும்பை டாடா நினைவு மருத்துவமனையும் புற்றுநோய் சிகிச்சை தொடர்பான நீண்டகால ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவுக்கான உதவித் துணைவேந்தர் பேராசிரியர் திரு.ஃபிராங்க் புளூம் ஃபீல்டும் டாடா நினைவு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். ராஜேந்திர பட்வே தலைமையிலான குழுவினரும் சந்தித்து ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
நோயாளிகள் தொடர்பான மருத்துவ தகவல்கள் மருந்துகள் தொடர்பான பரிந்துரைகள் உள்ளிடவற்றை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கான திட்டங்கள் தொடக்கத்தில் இந்த ஒப்பந்தத்தின் படி செயல்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர். ராஜேந்திர பட்வே, எங்களது நோயாளிகளுக்கான சிகிச்சை நடைமுறைகளை மேலும் மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளோம் என்று கூறினார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழில்நுட்பத்தின் துணையுடன் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். பேராசிரியர் புளூம்ஃபீல்டு கூறுகையில், சுகாதாரத் துறையில் இந்தியாவும், ஆக்லாந்தும் நீண்ட காலமாகவே ஒத்துழைப்புடன் செயல்படுவதாக தெரிவித்தார்.
***
AP/PLM/SG/KRS
(Release ID: 1901426)