அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளி, ட்ரோன், புவியியல் சார்ந்த கொள்கை போன்ற மும்முனை ஆற்றல் இந்தியாவைத் தொழில்நுட்ப சக்தியில் முதன்மையாக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்

Posted On: 21 FEB 2023 5:28PM by PIB Chennai

இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளி, ட்ரோன், புவியியல் சார்ந்த கொள்கை போன்ற மும்முனை ஆற்றல் இந்தியாவைத் தொழில்நுட்ப சக்தியில் முதன்மையாக்கும் என்று மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற "தேசிய மேம்பாட்டிற்கு புவியியல் சார்ந்த கொள்கை" தேசிய மாநாட்டில் பேசிய டாக்டர்.ஜிதேந்திர சிங் பேசும்போது, ஜுன் 2020ல் தனியார் துறையினருக்கு விண்வெளித்துறையில் பங்களிப்பு, பிப்ரவரி 2021ல் புவியியல் சார்ந்த தரவுகளுக்கான வழிகாட்டுதலின் விரிவாக்கம், டிசம்பர் 2022ல் புவியியல் சார்ந்த கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்தல், மத்திய  சிவில் விமான போக்குவரத்துறையால் ஏற்படுத்தப்பட்ட ட்ரோன் திருத்த சட்டங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, பிரதமர் திரு.நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றப் பிறகு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புவியியல் சார்ந்த கொள்கையின் கீழ், 21ம் நூற்றாண்டு இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் காரணியாக இது உருப்பெற்றுள்ளது என்றார். மேலும் இத்துறையில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகும். நம் நாட்டின் புவியியல் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு தனியார் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாகத் தரவுகளை திரட்டுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

***

AP/GS/SG/KRS



(Release ID: 1901173) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Hindi