நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நெல் கொள்முதல் 700 லட்சம் மெட்ரிக்டன் அளவை தாண்டியது, 96 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்

Posted On: 21 FEB 2023 5:09PM by PIB Chennai

2022-23 காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் மிகவும் சுமூகமாக நடைபெற்று வருகிறது. 20.02.2023 வரை 702 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து 96 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர்.  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,45,845 கோடிக்கும் மேல் நேரடியாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

தடையற்ற கொள்முதல் நடைமுறைகளை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 20.02.2023 வரை மத்திய தொகுப்பில் இருந்து 218 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் நாட்டின் தேவையை சமாளிக்கும் வகையில் போதுமான அரிசி இருப்பு தற்போதுள்ளது.

நடப்பு காரீஃப் பருவத்தில் 765.43 லட்சம் மெட்ரிக் டன் நெல் (514 லட்சம் மெட்ரிக் டன் அரிசி) கொள்முதல் செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021-22 காரீஃப் பருவத்தில் 749 லட்சம் மெட்ரிக் டன் நெல் (503 லட்சம் மெட்ரிக் டன் அரிசி) கொள்முதல் செய்யப்பட்டது.

 இந்த ஆண்டுக்கான ராபிப்பருவ நெல் கொள்முதல் மதிப்பீடு 01.03.2023 அன்று நடைபெறவுள்ள உணவுச் செயலாளர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ராபிப் பருவப் பயிரையும் சேர்த்து 2022-23 பருவத்தில் சுமார் 900 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 1901108)

AP/PKV/AG/KRS



(Release ID: 1901131) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Marathi