சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கனிம உற்பத்தி 2022 டிசம்பரில் 10 சதவீத உயர்வு

Posted On: 18 FEB 2023 9:50AM by PIB Chennai

நாட்டில் டிசம்பர் 2022-ல் சுரங்க மற்றும் குவாரித் துறை உற்பத்தி, 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 9.8 சதவீதம் அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில், 2022-23ம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான,  காலகட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 5.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.

டிசம்பர் 2022 இல் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு:

 நிலக்கரி 833 லட்சம் டன்கள், பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) - 35 லட்சம் டன்கள், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) -2888 மில்லியன் கியூபிக் மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) - 25 லட்சம் டன், பாக்சைட் - 2272 ஆயிரம் டன், குரோமைட் - 340 ஆயிரம் டன், செறிவூட்டபட்ட காப்பர் - 10 ஆயிரம் டன் , தங்கம் - 174 கிலோ, இரும்புத் தாது - 251 லட்சம் டன், ஈயம் - 30 ஆயிரம் டன், மாங்கனீஸ் தாது - 307 ஆயிரம் டன், செறிவூட்டப்பட்ட துத்தநாகம் - 137 ஆயிரம் டன், சுண்ணாம்பு - 355 லட்சம் டன், பாஸ்போரைட் - 170 ஆயிரம் டன், மேக்னசைட் - 9 ஆயிரம் டன், வைரம் - 43 காரட்.

 

2021 டிசம்பரை விட 2022 டிசம்பரில் உற்பத்தி அதிகரித்த முக்கியமான தாதுக்கள் மற்றும் அதிகரித்த சதவீதம்: தங்கம் (64.2%), பாஸ்போரைட் (53.9%), இரும்புத் தாது (19.5%), சுண்ணாம்பு (14.5), மாங்கனீஸ் தாது (12.8%), நிலக்கரி (11.4%) ), செறிவூட்டப்பட்ட துத்தநாகம் (9.4%), செறிவூட்டப்பட்ட லீட்  (4.5%), செறிவூட்டப்பட்ட காப்பர் (3.9%), மற்றும் இயற்கை எரிவாயு (2.6%).

***

AP  / PLM  / DL


(Release ID: 1900331)
Read this release in: English , Urdu , Hindi , Marathi