நிதி அமைச்சகம்
எஸ்பிஎம்சிஐஎல் – டிஇஆர்ஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
प्रविष्टि तिथि:
15 FEB 2023 4:17PM by PIB Chennai
முற்றிலும் மத்திய அரசுக்குச் சொந்தமான மினி ரத்னா பிரிவைச் சேர்ந்த ரூபாய் மற்றும் நாணயம் அச்சிடும் நிறுவனமான இந்தியப் பாதுகாப்பு அச்சிடுதல் மற்றும் நாணய உருவாக்கல் கழகம் எஸ்பிஎம்சிஐஎல், எரிசக்தி வள நிறுவனம் டிஇஆர்ஐ-யுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எஸ்பிஎம்சிஐஎல் வணிக அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சிரோலியாவை ரூ.525.49 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி கிராமமாக ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சியுடன் மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனத்தின் வர்த்தக பொறுப்புடைமை ஆதார நிதியில் (சிஎஸ்ஆர்) இது செயல்படுத்தப்படும்.
எஸ்பிஎம்சிஐஎல் சார்பில் இயக்குநர் திரு.எஸ்.கே.சின்ஹா, தலைமை பொது மேலாளர் திரு.பி.ஜே.குப்தா, இணை பொது மேலாளர் திரு.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டிஇஆர்ஐ நிறுவனத்தின் சார்பில் இணை இயக்குநர் மற்றும் சிஎஸ்ஆர் தலைவர் திரு.அமித் குமார் தாக்கூர், ஆராய்ச்சி உதவியாளர் திருமிகு. மிட்டாக்ஷா ரஸ்வந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***
AP/PKV/RR/PK
(रिलीज़ आईडी: 1899487)
आगंतुक पटल : 212