குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் புரிதலை எளிதாக்குவதற்கான டிஜிட்டல் முன்முயற்சிகள்

Posted On: 13 FEB 2023 2:40PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் புரிதலை எளிதாக்கும் வகையிலும் அவற்றுக்கு டிஜிட்டல் அதிகாரமளிக்கவும் பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

     இணையதள பதிவிற்காக உத்யம் இணையதளம், குறு, சிறு நடுத்தர நிறுவனங்களின் குறைகளைக் களைய  சாம்பியன்ஸ் இணைய தளம், இணையதளம் வாயிலாக கொள்முதலுக்காக ஜிஇஎம் தளம்,  வர்த்தகம் பெறுதலுக்கான தள்ளுபடி நடைமுறைகள் (TReDS) இணையதளம், சந்தை ஆதரவுக்காக எம்எஸ்எம்இ மார்ட் டாட் காம் இணையதளம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.  இதுதவிர, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனங்களிடமிருந்து  கொள்முதல் செய்வதை கண்காணிப்பதற்காக எம்எஸ்எம்இ சம்பந்த் தளமும், பொதுத்துறை நிறுவனங்கள் தாமதமாக பணம் செலுத்துவது தொடர்பான தகவல்களை தெரிவித்து விண்ணப்பிக்க எம்எஸ்எம்இ சமாதான் தளமும் உருவாக்கப்பட்டுள்ளன. 

     உதயம் இணையதளத்தின்கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.39 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.  அவை அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமாக பயனடைந்துள்ளன.  

இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப்சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898724   

***

AP/PLM/UM/GK


(Release ID: 1898886) Visitor Counter : 159


Read this release in: English , Urdu , Telugu