குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்கி மேம்படுத்த எம்எஸ்எம்இ சாம்பியன் திட்டத்தின்கீழ், எம்எஸ்எம்இ புதுமைக் கண்டுபிடிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

Posted On: 13 FEB 2023 2:42PM by PIB Chennai

நாட்டில் தொழில் பாதுகாப்பு மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது  நித்தி ஆயோக்கின் தகவல் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் அடல் தொழில் பாதுகாப்பு மையங்களின் எண்ணிக்கை 69-ஆக அதிகரித்துள்ளது.  2017 ஆம் ஆண்டில் இது 13-ஆக இருந்தது.

புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்கி மேம்படுத்த எம்எஸ்எம்இ சாம்பியன் திட்டத்தின்கீழ், எம்எஸ்எம்இ புதுமைக் கண்டுபிடிப்புத் திட்டம் 2022 மார்ச் மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அடல் புதுமை இயக்கத்தின்கீழ், 56 அடல் தொழில் பாதுகாப்பு மையங்களும், 14 அடல் சமுதாயப் புதுமைக் கண்டுபிடிப்பு மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

அடல் புதுமை இயக்கத்தின் கீழ், உலகத்தரத்திலான அடல் தொழில் பாதுகாப்பு மையங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நிறுவப்படுகின்றன.  நித்தி ஆயோக்கின் தகவல் அடிப்படையில் 69 அடல் தொழில் பாதுகாப்பு மையங்கள் மூலம் 3052 புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  இவற்றின் 954 புத்தொழில் நிறுவனங்கள் மகளிரால் நடத்தப்படுபவை ஆகும்.  இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் 15,506 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப்சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898728

***

AP/PLM/UM/RR



(Release ID: 1898813) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Telugu