குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

Posted On: 13 FEB 2023 2:43PM by PIB Chennai

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் பொது கொள்முதல் கொள்கை தொடர்பான 3-ம் தரப்பு ஆய்வை மேற்கொண்டு இறுதி அறிக்கையை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்திடம் 16 அக்டோபர், 2022 அன்று வழங்கியது.  இதன் அடிப்படையில் இந்தக் கொள்கைக்கு அனைத்து நிலைகளிலும் வரவேற்பு இருப்பது தெரியவந்துள்ளது.  

     மொத்த வணிகம், வேலைவாய்ப்பு வளர்ச்சி, உற்பத்தித் திறன் என அனைத்திலும் இது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தக் கொள்கை தொடர்பாக அரசு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது. இந்தக் கொள்கையின் அடிப்படையில், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து இதுவரை ரூ.1.39 லட்சம் கோடி மதிப்பில் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  மகளிரால் நடத்தப்படும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து ரூ.1412 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  

இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப்சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

(Release ID: 1898729)

***

AP/PLM/UM/RR(Release ID: 1898785) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Telugu