பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏரோ இந்தியா கண்காட்சி, ஒரு முன்னோட்டம்

கடற்படை விமானப் போக்குவரத்து மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துதல்

Posted On: 11 FEB 2023 4:29PM by PIB Chennai

ஏரோ இந்தியா 2023 கண்காட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு, பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை மையத்தில்  பிப்ரவரி 13-17  வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தொழில்துறையினருக்கு தங்களின் சமீபத்திய உபகரணங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பாதுகாப்புத்துறை அலுவலர்கள், அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கும், ஆயுதப் படைகளில் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான  தயாரிப்புகளில் முதல் அனுபவத்தைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ‘ஆத்மநிர்பர்தா’- தற்சார்பு இந்தியா என்ற நிலையை அடைவதற்கான நம் நாட்டின் இலக்கைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படை சமீபத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர்விமானமான (இரட்டை என்ஜின் டெக் அடிப்படையிலான போர்விமானம்) இலகு ரகபோர் விமானம் (கடற்படை) உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ‌என்‌எஸ்  விக்ராந்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தை இந்திய கடற்படை சோதனை விமானி இயக்கினார். இந்தியக் கடற்படையின் ஆத்மநிர்பர் பாரத்-தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையின் விளைவுதான் இந்த முக்கிய நடவடிக்கையாகும். ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில், இந்திய கடற்படை முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கிறது.

 

பல ஆண்டுகளாக பங்கேற்பிலும், செயல்பாட்டு  அளவிலும் வளர்ச்சியடைந்துள்ள ஏரோ இந்தியா, கடற்படை விமானப் போக்குவரத்து மற்றும் நாட்டின்  பாதுகாப்புப் படைகளின் தன்னம்பிக்கையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக மற்றொரு முக்கிய நிலையை நிரூபிக்கும் விதமாக அமையும்.

***

PKV / GS / DL


(Release ID: 1898347) Visitor Counter : 165


Read this release in: Urdu , English , Marathi , Hindi