தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

‘ஒருங்கிணைந்த உரிமத்தின் கீழ் டிஜிட்டல் இணைப்பு உள்கட்டமைப்பு அளிப்பவர் அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துதல்’ குறித்த ஆலோசனைக் கட்டுரையை டிராய் வெளியிட்டுள்ளது

Posted On: 11 FEB 2023 2:37PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)  இன்று ‘ஒருங்கிணைந்த உரிமத்தின் கீழ் டிஜிட்டல் இணைப்பு உள்கட்டமைப்பு அளிப்பவர் அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துதல்’ குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

 

தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்புக் கொள்கை 2018 கீழ்  டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  "டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அதன் சேவைகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சிறந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும். தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்புக் கொள்கை 2018 கீழ்,  இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்லும் இயக்கங்களின் பணியை நிறைவேற்றுவதற்கான வழிகளில் ஒன்றாக, “வேறுபட்ட உரிமம் மூலம் வெவ்வேறு அடுக்குகளை (எ.கா, உள்கட்டமைப்பு, நெட்வொர்க், சேவைகள் மற்றும் பயன்பாடுகள் அடுக்கு) கொண்ட கட்டமைப்பில் எளிமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” 

 

ஒரு வலுவான டிஜிட்டல் இணைப்பு உள்கட்டமைப்பு  உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வசதிகளை வழங்குவதன் மூலமும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில்  பங்களிப்பு செய்ய முடியும்.

 

இந்த ஆலோசனைக் கட்டுரையின் நோக்கம், ஒருங்கிணைந்த உரிமத்தின் கீழ் முன்மொழியப்பட்ட  அங்கீகாரம் குறித்து துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்துக்களைப் பெறுவதாகும். டிராய்-ன் இணையதளமான www.trai.gov.in -ல் கலந்தாய்வு (ஆலோசனை) கட்டுரை உள்ளது. இந்த கட்டுரை மீதான எழுத்துப்பூர்வ கருத்துகள் துறை சார்ந்த வல்லுனர்களிடமிருந்து மார்ச் 09, 2023க்குள் வரவேற்கப்படுகிறது. எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், மார்ச் 23, 2023க்குள் தெரிவிக்க வேண்டும்.

ஏதேனும் தெளிவு/தகவல்களுக்கு, திரு சஞ்சீவ் குமார் ஷர்மா, ஆலோசகர் (பிராட்பேண்ட் மற்றும் கொள்கை பகுப்பாய்வு), டிராய் +91-11-23236119 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

***

PKV / GS/ DL



(Release ID: 1898316) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi , Telugu