சுரங்கங்கள் அமைச்சகம்
நால்கோ-வின் லாபம் இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது
प्रविष्टि तिथि:
11 FEB 2023 9:51AM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா மத்திய பொதுத் துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO), டிசம்பர் 2022 உடன் முடிவடைந்த 3-வது காலாண்டிற்கான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. புவனேஸ்வரில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டின் 3வது காலாண்டிற்கான மதிப்பாய்வு செய்யப்பட்ட நிதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நால்கோவின் நிகர லாபம் 274 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. முந்தைய காலாண்டில் இது 170 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இது 61 சதவீதம் அதிகமாகும்.
3-வது காலாண்டில் நிகர விற்பனை விற்றுமுதல் ரூ. 3290 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் காலாண்டில் அலுமினியத்தின் குறைந்த விற்பனை அளவு, அதிக உள்ளீட்டுச் செலவுகள், உலகளாவிய சவாலான வணிக சூழ்நிலை மற்றும் ஏற்ற இறக்கம் ஆகியவை லாப வரம்பை சற்று பாதித்து. இருப்பினும் இந்நிறுவனம் அனைத்து துறைகளிலும் உற்பத்தியைப் பொறுத்தவரை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நால்கோ-வின் செயல்பாட்டுத் திறனும் குழுப் பணியும் சரிவுக் காலத்தைக் கடப்பதில் முக்கியப் பங்காற்றியது. உலக அளவில் அலுமினியம் விலையை உறுதிப்படுத்துவது மற்றும் அதிக உற்பத்தி அளவுகள், நிச்சயமாக வரும் காலாண்டுகளில் லாப வரம்பை மேலும் அதிகரிக்கும். இந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு முடிவுகள் ஒட்டுமொத்த 2022-23 நிதி ஆண்டின் முழு முடிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நால்கோ-வின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு ஸ்ரீதர் பத்ரா கூறினார்.
***
PKV/ PLM / DL
(रिलीज़ आईडी: 1898255)
आगंतुक पटल : 207