நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நகர்ப்புறத்தில் 75% மற்றும் கிராமப்பகுதிகளில் 50% மக்களுக்கு தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 பயனளிக்கிறது
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 100% பயனாளிகள் பயனடைந்துள்ளனர்
Posted On:
10 FEB 2023 2:41PM by PIB Chennai
நகர்ப்புறத்தில் 75% மற்றும் கிராமப்பகுதிகளில் 50% மக்களுக்கு தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 பயனளிக்கிறது என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறையின் கீழ், அதிகபட்ச மானியத்துடன் இவர்கள் உணவு தானியங்களை பெறுகிறார்கள் என்றும், மத்திய உணவு, நுகர்வோர் நலன், பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் மூலம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 81.35 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 36 கோடியே 47 லட்சம் பயனாளிகள் முழுமையாக பயனடைந்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 6 லட்சத்து 34 ஆயிரம் பயனாளிகளும் பயனடைந்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்த சட்டத்தின் கீழ், அந்த்யோதயா அன்னை யோஜனா திட்டம் மற்றும் நலிந்த பிரிவு மக்களுக்கு 2023 ஜனவரி 1 முதல் விலையின்றி உணவு தானியங்கள் வழங்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கு ஆகும் செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
***
SMB/RS/KPG
(Release ID: 1897961)
Visitor Counter : 175