ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தண்ணீரின் இருப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான மத்திய அரசின் திட்டங்கள்

Posted On: 09 FEB 2023 1:15PM by PIB Chennai

தண்ணீரின் இருப்பு, பாதுகாப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஏராளமான முயற்சிகளையும் திட்டங்களையும் இந்திய அரசு தொடங்கியுள்ளதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பாட்டேல் இன்று கூறினார். நீர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாக  அவர் கூறியதாவது:

•     தேசிய தண்ணீர் இயக்கம்:

ஒருங்கிணைந்த நீர் வள மேம்பாடு மற்றும் மேலாண்மையின் வாயிலாக மாநிலங்கள் இடையேயும் மாநிலங்களுக்குள்ளும் தண்ணீரை முறையாக விநியோகித்து தண்ணீர் வீணாவதைத் தடுத்து, அதை பாதுகாக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் நீர் மேலாண்மைக்காக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களில் கவனம் செலுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும் “சஹி ஃபசல்” பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது.

•     அடல் புஜல் திட்டம்:

குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் 2020 ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் இந்த மத்திய அரசு திட்டம், நிலுவையில் உள்ள இதர திட்டங்களுடன் ஒருங்கிணைந்து சமூக பங்களிப்புடன் நிலையான நிலத்தடி நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது.

 

•     புத்தாக்கம் மற்றும் நகர்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் (அம்ருத்):

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 500 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் அடிப்படை நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. நிதியாண்டு 2015-2016 முதல் நிதியாண்டு 2019-2020 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்திற்கான இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

•     ஜல் ஜீவன் இயக்கம்- ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் திட்டம்:

2024-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் இத்திட்டத்தின் கீழ் 06.02.2023 வரை நாடு முழுவதும் உள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளுள் 11.10 கோடி வீடுகளுக்கு (57%) இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

•     ஜல் சக்தி திட்டம்-I:

256 மாவட்டங்களில் தண்ணீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய குளங்களை புணரமைத்தல் போன்றவற்றிற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

(Release ID: 1897617)

***

AP/RB/KPG


(Release ID: 1897644) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Marathi , Telugu