நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2023 4:24PM by PIB Chennai

நாட்டில் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 778.19 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.  208.93 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. மொத்தம் 818.99 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டது. 2022-23-ம் நிதியாண்டில் ஜனவரி 2023 நிலவரப்படி, 698.24 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. 719.86 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 2022 வரை, 168 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம், மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி மக்களவையில் இன்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897343

-----

AP/IR/KPG/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1897447) வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu