நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நிலக்கரி விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை: ஜனவரி 2023-ல் உற்பத்தி 698.24 மில்லியன் டன்னை எட்டியது

Posted On: 08 FEB 2023 4:27PM by PIB Chennai

நாட்டில்  நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 716.08 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில் 778.19 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜனவரி 2023 வரை 698.24 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட  16%  அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரை  572.25 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி விநியோகம் செய்து நாட்டிலேயே மிகப் பெரிய நிலக்கரி விநியோகஸ்தராக  இந்திய நிலக்கரி நிறுவனம் திகழ்கிறது.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 5.5% அதிகமாகும்.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம், மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி மக்களவையில் இன்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897343

-----

AP/IR/KPG/GK(Release ID: 1897446) Visitor Counter : 59


Read this release in: English , Urdu