மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவிலிருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி

Posted On: 08 FEB 2023 1:46PM by PIB Chennai

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து  ஏற்றுமதி  செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு விவரங்களை தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள்“ வெளியிட்டுள்ளன.

2019-20-ஆம் நிதியாண்டில் 150 பில்லியன் டாலர் அளவிற்கும் 2020-21-ம் நிதியாண்டில் 151 பில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22-ம் நிதியாண்டில் 178 பில்லியன் டாலர் அளவிற்கும் தகவல் தொழில்நுட்பம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இத்தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897273

-----

AP/IR/KPG/GK


(Release ID: 1897356) Visitor Counter : 177


Read this release in: English , Urdu , Kannada