தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
‘ஐஇஇஇ சி-டிஓடி சான்றளிக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிபுணர் பாடத்திட்டத்தை திரு கே ராஜாராமன் தொடங்கிவைத்தார்
Posted On:
08 FEB 2023 9:35AM by PIB Chennai
5-ஜி, இணையதள பாதுகாப்பு, ஒட்டுமொத்த தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றின் திறன்களை மேம்படுத்த மின் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் (‘ஐஇஇஇ) சி-டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டிஓடி) சான்றளிக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிபுணர் பாடத்திட்டத்தை மத்திய தொலைதொடர்பு செயலாளரும், டிஜிட்டல் தகவல் ஆணையத் தலைவருமான திரு ராஜாராமன் தொடங்கிவைத்தார்.
புதுதில்லியில் நேற்று நடைபெற்ற ஐஇஇஇ தரக் கூட்டாண்மையின் பயிலரங்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜாராமன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப பரிணாமம், தரப்படுத்துதல் ஆகியவற்றில் சி-டிஓடி, ஐஇஇஇ ஆகியவை சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தரமான, பாதுகாப்பான, குறைந்த விலையில், அனைவருக்கும் உகந்த வகையிலான தொலைத் தொடர்பு பொருட்களை தயாரிப்பதில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகத்துடன் (ஐஇஇஇ) இணைந்து செயல்பட தொலைத் தொடர்புத்துறை தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897186
***
AP/IR/KPG/GK
(Release ID: 1897337)
Visitor Counter : 180