மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் பிரதமரின் ஊட்டச்சத்து இயக்கம் (போஷான் அபியான்) செயல்படுத்தப்படுவது தொடர்பாக சிறப்புத் தணிக்கை செய்யுமாறு தலைமை கணக்குத் தணிக்கையாளரை மத்திய கல்வியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது
प्रविष्टि तिथि:
08 FEB 2023 12:22PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில் பிரதமரின் ஊட்டச்சத்து இயக்கம் (போஷான் அபியான்) செயல்படுத்தப்படுவது தொடர்பாக சிறப்புத் தணிக்கை செய்யுமாறு தலைமை கணக்குத் தணிக்கையாளரை மத்திய கல்வியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய உணவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மேற்குவங்கத்தில் முறையற்ற வகையில் செலவு செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக சிறப்புத் தணிக்கை செய்யுமாறு தலைமை கணக்குத் தணிக்கையாளருக்கு கல்வியமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் கடந்த 3 நிதியாண்டுகளில் பிரதமர் போஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டது தொடர்பாக சிறப்புத் தணிக்கை செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் தணிக்கையில் இணக்கச்சுமை, செயல்பாடு மற்றும் நிதி தொடர்பான தணிக்கை ஆகியவை இடம்பெறும்.
***
AP/GS/UM/GK
(रिलीज़ आईडी: 1897333)
आगंतुक पटल : 154