கனரகத் தொழில்கள் அமைச்சகம்

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள 16,73,115 மின்சார வாகனங்கள்

Posted On: 07 FEB 2023 4:32PM by PIB Chennai

மத்திய கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாட்டில்  மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேகமாக  உற்பத்தியை அறிமுகப்படுத்தியது

நாட்டில் பேட்டரியின் விலைகளைக் குறைக்கும் வகையில், மேம்பட்ட வேதியியல் செல்களை  உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத்  திட்டத்திற்கு மே 12, 2021 அன்று அரசு ஒப்புதல் அளித்தது.

மின்சார வாகனங்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன, இது செப்டம்பர் 15, 2021 அன்று ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில்  அங்கீகரிக்கப்பட்டது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்கள்/சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்  பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பச்சை நிற உரிமத் தகடுகள் வழங்கப்படுவதுடன்,  அனுமதி தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது.

மின்சார வாகனங்களின்  மீதான சாலை வரியை தள்ளுபடி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்   ஒரு அறிவிப்பை வெளியிட்டது, இது மின்சார வாகனங்களின்  ஆரம்ப விலையைக் குறைக்க உதவும்.

தமிழ்நாட்டில் 1, 69,006 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

***



(Release ID: 1897072) Visitor Counter : 109


Read this release in: English , Urdu , Telugu