சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தொலை மனநலத் திட்டம்
Posted On:
07 FEB 2023 3:34PM by PIB Chennai
நாட்டில் தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேலும் மேம்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு அக்டோபரில் அரசு “தேசிய தொலை மனநலத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்காக 2022-23 ஆம் ஆண்டுக்கு மொத்தம் ரூ. 120.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலை மனநலத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 31.01.2023 வரை மொத்தம் 43,861 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 130 மனநல நிபுணர்கள், 173 பணியாளர்கள் மற்றும் 580 ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தற்போது, டெலி-மனாஸ் சேவைகள் மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிகளின் அடிப்படையில் இந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கொங்கனி, மராத்தி, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, பஞ்சாபி, காஷ்மீரி, போடோ, டோக்ரி, உருது, மணிப்பூரி, மிசோ, ராஜஸ்தானி ஆகிய 20 மொழிகளில் கிடைக்கின்றன:
2016 ஆம் ஆண்டில், பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மூலம் இந்திய தேசிய மனநலக் கணக்கெடுப்பை அரசு நடத்தியது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1897067)
Visitor Counter : 200