ஆயுஷ்

ஆயுஷ் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம்

Posted On: 07 FEB 2023 3:47PM by PIB Chennai

நம் நாட்டில் 476 ஆயுர்வேதா, 56 யுனானி, 13 சித்த மருத்துவம், 7 சோவா-ரிக்பா மற்றும் 284 ஹோமியோபதி மருத்துவ நிறுவனங்கள் மூலம் கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 2021-22 கல்வி ஆண்டில் இளங்கலைப் பட்டப்படிப்பில், ஆயுர்வேதாவில் 34,202 இடங்களும், சித்த மருத்துவத்தில் 916, யுனானியில் 3103 இடங்களும், சோவா-ரிக்பாவில் 85 இடங்களும், ஹோமியோபதியில் 19757 இடங்களும் உள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள மருத்துவ இடங்களுக்கான எண்ணிக்கை, கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப மாறுபடும். அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் அந்த மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896965

***

AP/GS/RJ/GK(Release ID: 1897029) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Telugu