சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார அமைப்புகள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2023 3:27PM by PIB Chennai

நாட்டின் சுகாதார அமைப்பானது, துணை சுகாதார மையம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்), ஆரம்ப சுகாதார நிலையம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்), சமூக சுகாதார மையம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) ஆகிய மூன்று அடுக்கு அமைப்பை உள்ளடக்கியது.  நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி, கிராமப்புறங்களில் 20,000 மக்கள் தொகை, (மலைப்பகுதி மற்றும் பழங்குடியினர் பகுதிகளில்), 30,000 (சமவெளிகளில்) மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும்.  5,000 (சமவெளியில்) மற்றும் 3000 (மலை மற்றும் மலைப்பகுதிகளில்) மக்கள் தொகைக்கு துணை மையம் நிறுவப்பட வேண்டும்.  1,20,000 (சமவெளியில்) மற்றும் 80,000 (மலை மற்றும் பழங்குடியினர் பகுதியில்) மக்கள்தொகைக்கான சமூக சுகாதார மையம் அமைக்கப்படுகிறது.

கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள் என்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட சுகாதார நிர்வாகத் தரவுகளின் அடிப்படையில் ஒரு வருடாந்திர வெளியீடு ஆகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்துவமனைகள் நிறுவப்பட்ட பிறகு, பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சேவை செய்யும்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.

***

(Release ID: 1896950)

AP/PKV/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1897025) வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu