ஜல்சக்தி அமைச்சகம்
பாதுகாப்பான குடிநீர் வசதி
Posted On:
06 FEB 2023 5:04PM by PIB Chennai
2024 ஆம் ஆண்டு இந்திய கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நீண்டகால திட்டத்தின்படி, நாள் ஒன்றுக்கு வீடுகளுக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்தை தொடங்கிய 2019 ஆம் ஆண்டில் 3.23 கோடி கிராமப்புற வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது 02.02.2023 ஆம் தேதி வரையிலான கடந்த மூன்றரை ஆண்டுகளில் 7.83 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளில் குழாய் வாயிலான குடிநீர் வசதி வழங்கப்பட்டது. அதாவது நாட்டிலுள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில் சுமார் 11.07 கோடி வீடுகளில் இந்த குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் சிங் பட்டேல் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான தகவலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
AP/ES/UM/RR
(Release ID: 1896706)
Visitor Counter : 186