பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத்துறை செலவினத்தின் ஒட்டுமொத்த நிலவரம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2023 3:13PM by PIB Chennai

2014-15 முதல் 2022-23-ம் நிதியாண்டு வரை அரசு செலவினத்தில் பாதுகாப்புத் துறையின் செலவின சதவீத விவரங்கள்;

2014-15-ம் நிதியாண்டில் மத்திய அரசு செலவினம் ரூ. 16,63,673 கோடி, பாதுகாப்புத்துறையின் செலவினம் ரூ. 3,17,207 கோடி-  மத்திய அரசு செலவினத்தில் 19.07 சதவீதம்.

2022-23-ம் நிதியாண்டில் மத்திய அரசு செலவினம் ரூ. 39,44,909 கோடி, பாதுகாப்புத் துறையின் செலவினம் ரூ. 5,55,484 கோடி- மத்திய அரசு செலவினத்தில் 14.08 சதவீதம்.

மத்திய அரசு செலவினம் அதிகரிப்பதால் பாதுகாப்புத்துறை செலவினத்தின் சதவீதம் குறைவாக இருப்பது போல் தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் பாதுகாப்புத்துறையின் செலவினங்கள் அதிகரித்து வருவதை காட்டுகிறது.

இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய்பட், திரு பினோ விஸ்வமிடம் தெரிவித்தார்.

 

***

AP/IR/RJ/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1896633) வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu