பாதுகாப்பு அமைச்சகம்
தமிழ்நாடு பாதுகாப்புத் தளவாட தொழில் முனையம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2023 3:12PM by PIB Chennai
பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்காக சென்னை, கோயம்பத்தூர், ஹொசூர், சேலம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களை தமிழ்நாடு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி முனையம் கண்டறிந்துள்ளது. 53 தொழிற்சாலைகளின் மூலம் ரூ. 11,794 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை ஏற்கனவே தொழிற்சாலைகள் மூலம் ரூ.3,861 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழிற்சாலைகள் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இத்தகவலை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய்பட் மாநிலங்களவையில் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு தெரிவித்தார்.
***
AP/IR/RJ/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1896627)
வருகையாளர் எண்ணிக்கை : 340