நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மின்னணு ஏலம் மூலம் கோதுமை இரண்டாவது விற்பனை, பிப்ரவரி 15, 2023 அன்று நடைபெறுகிறது

Posted On: 04 FEB 2023 10:31AM by PIB Chennai

மின்னணு ஏலத்தின் மூலம் இரண்டாவது கோதுமை விற்பனை 2023 பிப்ரவரி 15 புதன்கிழமையன்று நாடு முழுவதும் நடைபெறும்.

பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெற்ற முதல் மின்-ஏலத்தில் வெற்றிகரமாக ஏலம் எடுத்த அனைத்து ஏலதாரர்களும் பணத்தை செலுத்தி நாடு முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட கிடங்குகளில் உள்ள சரக்குகளை உடனடியாக எடுத்துச் சென்று அந்தந்த சந்தைகளில் கிடைக்கச் செய்யுமாறு இந்திய உணவுக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. விலைகளை மேலும் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மின் ஏலத்தில் விற்கப்படும் கோதுமை எடுத்துச் செல்லப்பட்டு, சந்தையில் ஆட்டா விற்பனைக்கு வந்த பிறகு விலை மேலும் குறையும்.

நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின்படி, இந்திய உணவுக் கழகம் 25 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் 22 லட்சம் மெட்ரிக் டன்னை மத்தியத் தொகுப்பில் இருந்து மின் ஏலத்துக்கு வழங்கியது. உள்நாட்டுத் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் பல்வேறு வழிகளில் சந்தைகளில் விற்பனை செய்ய 2023 பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் மின் ஏலம் நடைபெற்றது.

மின்-ஏலத்தில், முதல் வாரத்தில் 1150-க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் பங்குபெற்றதுடன் நாடு முழுவதும் 9.2 லட்சம் மெட்ரிக் டன் அளவு கோதுமை விற்பனையானது. 

*****

PKV/PLM/KPG



(Release ID: 1896254) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Marathi , Hindi