குடியரசுத் தலைவர் செயலகம்
ஜாம்பியா நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்
प्रविष्टि तिथि:
02 FEB 2023 6:15PM by PIB Chennai
ஜாம்பியா நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நெல்லி பியூடெட் கசும்பா தலைமையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகைளில் அக்குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர் இந்தியாவும், ஜாம்பியாவும் வலிமையான, அன்பான நட்புறவை கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஜாம்பியா சுதந்திரப் போராட்டத்தின் போது, அதன் முக்கிய தலைவரும் அந்நாட்டு முதலாவது அதிபருமான டாக்டர் கென்னத் கவுண்டா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இருந்து உத்வேகம் பெற்றதாக கூறினார்.
பொருளாதார ஒத்துழைப்பு, இருதரப்பு வர்த்தகம் ஆகியவை வளர்ச்சியடைந்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். ஜாம்பியாவில் முதலீடு செய்யும் முன்னணி முதலீட்டாளராக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் கூறினார். இந்தியா மற்றும் ஜாம்பியாவின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார்.
இந்தியா, ஜாம்பியா நாடாளுமன்ற நட்புறவு குழுவை உருவாக்கியதற்காக ஜாம்பியா தேசிய சபையின் முயற்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
***
AP/IR/RS/ RJ
(रिलीज़ आईडी: 1895845)
आगंतुक पटल : 244