சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

வாக்காளர் அடையாள அட்டையின் முதன்மையான அங்கீகரிப்பு அடையாளமாக ஆதார் திகழ்கிறது

Posted On: 02 FEB 2023 5:22PM by PIB Chennai

 

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்கள் இதில் பங்கேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார். தேர்தல் பதிவு அலுவலர், வாக்குப்பதிவின் போது பல்வேறு ஆவணங்களை சரிபார்த்து ஆட்சேபனைகள் இருந்தால் அதற்கு தீர்வு காண்கிறார். தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிக்கும் நோக்கங்களுக்காக, தேர்தல் பதிவு அதிகாரியும் ஆதார் எண்ணைக் கோரலாம் என்று கூறப்படுகிறது. எனவே, வாக்காளர் பட்டியலை சீர்படுத்தும் நோக்கங்களுக்காக அங்கீகாரம் மற்றும் அடையாளம் காணும் பல ஆவணங்களில் ஆதார் முதன்மையானதாக திகழ்கிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின்  பதிவு செய்யப்பட்ட தரவுகளின் படி, 1.1.2023 அன்று  மொத்தம் 94,50,25,694 பேர்  வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

***

PKV/AG/RJ

 



(Release ID: 1895808) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Marathi