தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

எஸ்சிஓ திரைப்பட விழாவில், இந்தியாவை படப்பிடிப்புக்கான கேந்திரமாக மேம்படச் செய்தல், ஊக்குவிப்பு, எளிமைப்படுத்துதல் தொடர்பான குழு விவாதம் நடைபெற்றது

Posted On: 30 JAN 2023 2:17PM by PIB Chennai

மும்பையில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழாவின் 4-ம் நாளான இன்று இந்தியாவின் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வசதிகள் குறித்த விவாதம் தொடங்கியது. இது முன்னணித் தயாரிப்பாளர்கள் ஆஷிஷ் சிங், அர்ஃபி லாம்பா(பாம்பே பெர்லின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்), தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு பிரித்துல் குமார், மகாராஷ்டிரா திரைப்பட, மேடை மற்றும் கலாச்சார வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் அவினாஷ் தாக்னே ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்த விவாதத்தில் பேசிய பிரித்துல் குமார், திரைப்பட வசதிகள் அலுவலகத்தின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவில் திரைப்படத் தயாரிப்புக்கான ஊக்குவிப்பிற்காக பல்வேறு மாநிலங்களில் உள்ள சலுகைகள், திரைப்பட படப்பிடிப்புக்கான அட்டவணை ஆகியவற்றை இந்த அலுவலகம் வழங்குவதாக தெரிவித்தார். இதில் பேசிய திரு அவினாஷ் தாக்னே, தொழில்துறையில் முன்னேறிய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள படப்பிடிப்பு நடைபெறாத இடங்களான அமராவதி, மேல்கட் ஆகிய இடங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  கிராமங்களில் திரைப்பட படப்பிடிப்பின் மூலம் கிராமச் சுற்றுலாவை மீட்டெடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் திரு ஆஷிஷ் சிங், தயாரிப்பாளர்கள் எளிமையாக படப்பிடிப்பு நடத்த விரும்பும்வகையிலான விவரங்களை திரைப்பட வசதிகள் அலுவலகம்  வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.  சலுகைகளை அளித்ததன் மூலம் ஆஸ்திரியாவும், இங்கிலாந்தும் எவ்வாறு வெளிநாட்டுத் திரைப்பட படப்பிடிப்புக்கான தலங்களாக மாறியது என்பது குறித்து அவர் விவரித்தார்.

***

AP/IR/AG/KRS



(Release ID: 1894746) Visitor Counter : 125


Read this release in: English , Hindi , Marathi , Kannada