இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்துவதற்கான 2 நாள் தேசிய பிரைன்ஸ்டோர்மிங் அமர்வு

Posted On: 29 JAN 2023 5:55PM by PIB Chennai

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், வாரணாசி ஐஐடி மற்றும் ஐஎன்ஒய்ஏஎஸ் சார்பில், இந்திய இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்துவதற்கான 2 நாள் தேசிய  பிரைன்ஸ்டோர்மிங் அமர்வு 2023 ஜனவரி 24 மற்றும் 25ம் தேதிகளில்  நடைபெற்றது. தற்போது அறிவியல் ஆராய்ச்சி  முறைகளுக்கு ஏற்பஇந்திய இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்துவது சார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ளப்பட்டன.  இந்த அமர்வுவாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் ஸ்வடன்ட்ராடாவின் செனட் அரங்கத்தில் நடத்தப்பட்டது.  இதில் இளம் விஞ்ஞானிகளின் மேம்பாட்டுக்கு ஏதுவாக புதிய கொள்கைகளை வகுப்பதற்கான  அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

24ம் தேதி நடைபெற்ற தொடக்க அமர்வில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் பாரிவேந்தர் மாயினி, வாரணாசி ஐஐடி  இயக்குநர் டாக்டர் பிரமோத் ஜெயின் பங்கேற்றனர். 25ம் தேதி நடைபெற்ற 2ம் அமர்வில், டெல்லி ஐயூஏசி  இயக்குநர் அவினாஷ் சந்திர பாண்டே நிறைவுவிழா உரையாற்றினார்.

 இதில்  கல்வி ஆராய்ச்சியின் 7 முக்கிய தலைப்புகள் குறித்து இந்த அமர்வுகளில் விவாதிக்கப்பட்டது.  ஆராய்ச்சிகளை எளிமையாக மேற்கொள்வதுஆராய்ச்சியில் உள்ள பன்னோக்கு அம்சங்கள், ஆராய்ச்சியின் நெறிமுறைகள், பணியிடங்களில் எதிர்கொள்ளும் சாவல்கள்ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை  உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894489

 

****

 

ES / DL


(Release ID: 1894535) Visitor Counter : 211


Read this release in: English , Urdu , Hindi