தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்பட விநியோகத்தின் எதிர்காலம் பற்றி எஸ்சிஓ திரைப்படவிழாவில் விவாதம்

Posted On: 29 JAN 2023 6:02PM by PIB Chennai

மும்பையில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் திரைப்பட விழாவின் 3ம் நாளில், இந்தியா மற்றும் உலகளவில், திரைப்பட விநியோகத்தின் எதிர்காலம் குறித்த விவாதம்  நடத்தப்பட்டது. இதில் திரைப்பட விநியோகத்தை பல்வேறு கோணங்களில், நேரடியாக  விவாதித்தனர். மேலும் ஓடிடி பிளாட்ஃபார்ம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள், ரசிகர்களின் மாறிவரும் விருப்பங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. எஸ்சிஓ திரைப்படவிழாவின் சீனாவின் ஜூரி உறுப்பினர் நிங் யங், 91 பிலிம் ஸ்டுடியோஸின் நிருவனர் மற்றும்  தலைமை செயல் அதிகாரி நவீன் சந்திரா, திரைப்பட தயாரிப்பாளர் சுனிர் கேத்தர்பால்இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்  ஷிபாஷிஷ் சர்கார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஷிபாஷிஷ் சர்கார் விளக்கினார். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, திரையரங்கத்திற்கு செல்வதற்கே மக்கள் பயந்ததையும் சுட்டிக்காட்டினார்.  டிஜிட்டல்மயமாக்கலின் புதிய அலை, ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள தனிப்பட்ட விமர்சகர்களை உருவாக்கியிருக்கிறது என்று நவீன் சந்திரா கூறினார்.  உடனுக்குடன் விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவது, திரைப்படங்களுக்கு பெரும் சவால்களை உருவாக்கிவிடுவதாகவும் குறிப்பிட்டார். உலகளாவிய திரைப்படத்தின் பிராந்தியமயமாக்கல், ரசிகர்களின் விருப்பம் மற்றும் நகரங்களில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை, 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கார் திரைப்படவிழாவில் கொரிய திரைப்படம் சிறந்த திரைப்படாகத் தேர்வு செய்யப்பட்டதை  உதாரணமாக மேற்கோள் காட்டி விளக்கினார்.

பெரிய அல்லது சிறிய திரைப்படம் என்று எதுவுமில்லைஆனால்,   நல்ல மற்றும் கெட்ட திரைப்படம்  என்பது மட்டுமே ரசிகர்களிடையேத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக  சுனிர் கேதர்பால் கூறினார்.  உலகளாவிய திரைப்படங்களைப் பெருத்தவரை, பெரிய நடிகர்கள், புதிய சவாலாகத் திகழ்வதாக நிங் யிங் தெரிவித்தார்.  அதாவது பெரிய அல்லது முன்னணி நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்களுக்கு கணிக்கக்கூடிய சூதாட்டத்தை உருவாக்கிவிடுகிறார்கள். இதனால் பாக்ஸ ஆபிஸ் ஹிட் மூலம் அவர் பாதிக்கப்படும்போது, திரைப்படங்களும் பாதிப்பை எதிர்கொள்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அமர்வின் முடிவில், ஷிபாஷிஷ் சர்கார், ஹிந்தி திரைப்படங்கள்  தரமானக் கதைகள் மூலம் எவ்வாறு அதிக ரசிகர்களை உறுதிசெய்கின்றன என்பது குறித்து விளக்கினார். 

 

***

ES / DL



(Release ID: 1894526) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Hindi , Marathi