பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகளின் கூட்டுப்பயிற்சியான வீர்-கார்டியன் 2023 நிறைவு

Posted On: 27 JAN 2023 1:09PM by PIB Chennai

புது தில்லியில் நடைபெற்றுவந்த இந்தியா-ஜப்பான் விமானப்படைகளின் கூட்டுப்பயிற்சியான வீர்-கார்டியன் 2023 ஜனவரி 26ம் தேதியுடன் நிறைவடந்தது.

இதில் இந்திய விமானப்படையின் சார்பில் எஸ்யூ-30 எம்கேஐ விமானமும், ஐஎல்-78 ரக போர் விமானமும், 2 சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் ஜப்பான்  ஏர் செல்ஃப் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்(JASDF) சார்பில், எஃப்-12 மற்றும் எஃப்-15 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

மொத்தம் 16 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கூட்டு ஒத்திகையில்,  இரு நாட்டு விமானப்படைகளும், சிக்கலான சூழ்நிலைகளைத் திறம்பட எதிர்கொள்ள ஏதுவாகப் பயன்படுத்த வேண்டிய பன்முனைத் தாக்குதல் குறித்தப் பயிற்சியில் ஈடுபட்டனர். கொள்கை ரீதியிலான ஒத்துழைப்பு குறித்தும்,  ஆழமானப் புரிதல் பற்றியும் இருதரப்பு விமானப்படையின் ஊழியர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இருநாட்டு விமானப்படையினரும்,  பரஸ்வர நல்லுறவை மேம்படுத்தும் வாய்ப்பை  இந்த வீர் கார்டியன் 2023 அளித்தது. இதேபோல், இந்திய விமானப்படை மற்றும் ஜப்பான் விமானப்படை அதிகாரிகள் பொதுவான விஷயங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். அதேநேரத்தில் இந்த கூட்டுப்பயிற்சி, இரு நாட்டு விமானப்படைகளின் தனித்தன்மைகளைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பையும் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  ***

(Release ID: 1894080)

AP/ES/AG/KRS



(Release ID: 1894114) Visitor Counter : 185


Read this release in: English , Urdu , Marathi , Hindi