பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

50,000-க்கும் அதிகமான பெருந்திரள் பார்வையாளர்கள் பங்கேற்புடன் ஆதி சௌரிய விழா நிறைவடைந்தது

Posted On: 25 JAN 2023 10:04AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆதி சௌரிய விழா இன்று (25.01.2023) நிறைவடைந்தது. 50,000-க்கும் அதிகமான பெருந்திரள் பார்வையாளர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். மத்திய பழங்குடி மக்கள் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய கடலோர காவல்படை ஒத்துழைப்புடன் பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் பழங்குடி மக்களின் வண்ணமிகு நடனங்கள் இடம்பெற்றன. மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்த நாளை குறிக்கும் பராக்கிரம தினத்தையொட்டி ஆயுதப்படை பிரிவுகளின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு தீவிரமாக பணியாற்றி வருகிறது என்றும் இதன் பயன்கள் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் கூறினார். இதன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆதி சௌரிய விழா பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அழகிய காட்சிகளை நாட்டு மக்கள் கண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2023 ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் ஊர்தியும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தது.

பத்மஸ்ரீ விருதுபெற்றவரும், பின்னணி பாடகருமான திரு கைலாஷ் கெர் வழங்கிய  இசை நிகழ்ச்சியில் அவரது இனிய குரலால் மாபெரும் மக்கள் கூட்டத்தை கவர்ந்தார்.

***

AP/SMB/AG/KRS


(Release ID: 1893652) Visitor Counter : 158
Read this release in: English , Urdu , Hindi