கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
குஜராத் மாநிலம், கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் ரூ.270 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு திரு சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்
Posted On:
23 JAN 2023 6:06PM by PIB Chennai
குஜராத் மாநிலம், கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் ரூ.270 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய கப்பல், துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டி முடிவுற்றத் திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.73.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள எண்ணெய் இறங்கு தளத்தை அமைச்சர் திறந்து வைத்தார். 110 மீட்டர் நீளத்திலும், 12.40 மீட்டர் அகலத்திலும், டி வடிவத்தில் கட்டபட்டுள்ள எண்ணெய் இறங்கு தளம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும், சுமார் 250 பேருக்கு நேரடியாகவும், கட்டுமானத்தின் போது, வேலைவாய்ப்புக் கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனாவால், சரக்குகளைக் கையாள்வதில் நாட்டில் முதன்மையான துறைமுகமாக தீன் தயாள் துறைமுகம் திகழ்வதாக கூறினார்.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1893076)