மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தத்திற்காக துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்க மத்திய அரசு முடிவு
प्रविष्टि तिथि:
19 JAN 2023 5:29PM by PIB Chennai
தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தத்திற்காக துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்திருத்தம் அமலாக்கம் செய்யப்படும் போது தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவேற்றவோ, வெளியிடவோ, பரப்பவோ, பகிரவோ முடியாது. மேலும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் குழு மூலம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
***
GS/KPG/KRS
(रिलीज़ आईडी: 1892318)
आगंतुक पटल : 206