சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலாவது ஜி-20 சுகாதார பணிக்குழு கூட்டத்தில் மருத்துவ மதிப்புப் பயணம் குறித்த தொடக்க அமர்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் உரையாற்றினார்
Posted On:
19 JAN 2023 5:19PM by PIB Chennai
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலாவது ஜி-20 சுகாதார பணிக்குழு கூட்டத்தில் மருத்துவப் பயணம் குறித்த தொடக்க அமர்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் உரையாற்றினார். நல்ல ஆரோக்கியமே சிறந்த செல்வம், உலகில் மகிழச்சியாக இருப்பதற்கு ஒரே வழி உடல் ஆரோக்கியம் மட்டுமே என்று குறிப்பிட்ட அவர் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பது குறித்து நாங்கள் திட்டமிட்டு வருவதாக கூறிய அவர் இதன் மூலம் உலகில் சுகாதார வசதியில் ஏற்படும் பாகுபாடு குறையும் என்று தெரிவித்தார். சிறந்த கூட்டாண்மை மூலம் எதிர்கால மருத்துவ சிகிச்சை பயணத்திற்கான தனித்துவமிக்க திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதிநிகளை அவர் வலியுறுத்தினார்.
மருத்துவ சிகிச்சைக்கானப் பயணத்தின் மகத்துவம் குறித்து குறிப்பிட்ட அவர், பல நூற்றாண்டுகளாக உலகில் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பாரம்பரிய மருத்துவம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த்தார். பாரம்பரிய மருத்துவம் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பினர்களின் 170-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாரம்பரிய மருத்துவத்தின் பயன் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
***
TV/IR/RJ/KRS
(Release ID: 1892304)
Visitor Counter : 139