பாதுகாப்பு அமைச்சகம்
என்சிசி குடியரசு தின முகாம் 2023-ஐ பாதுகாப்பு இணையமைச்சர் பார்வையிட்டார்
Posted On:
19 JAN 2023 3:11PM by PIB Chennai
புது தில்லியில் உள்ள தில்லி கண்டோன்மெண்ட்டில் 2023 ஜனவரி 19 அன்று என்சிசி குடியரசு தின முகாம் 2023-ல் பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட் உரையாற்றினார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ஒளிரும் உதாரணமாக என்சிசி அமைப்பு விளங்குகிறது என்று அவர் கூறினார். இது தொடங்கப்பட்டதிலிருந்து இளைஞர்களிடம் ஒழுக்கம், நன்னடத்தை, தீர செயலுக்கான முயற்சி, தன்னலமற்ற சேவை சிந்தனை ஆகியவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
என்சிசி பிரிவு விரிவாக்கம் திட்டமிட்டபடி நடைபெறுவதாக பாதுகாப்பு இணையமைச்சர் கூறினார். இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம் கடலோரம், எல்லைப்பகுதி, இடதுசாரி அதிதீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் என்சிசி-யின் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிராமப்புற மற்றும் சிறிய நகரங்களிலும், என்சிசி சேவையைப் பயன்படுத்துவதற்கு சிறப்பு முயற்சிகள் பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய இளையோர் திருவிழா, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் போன்ற சமூக சேவைத் திட்டங்களில் என்சிசி-யின் பங்களிப்பு குறித்து திரு அஜய் பட் பாராட்டு தெரிவித்தார்.
***
SMB/IR/RJ
(Release ID: 1892247)
Visitor Counter : 158